இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை, பலவீனமான உலகளாவிய சூழல்களால் இன்று (ஜூன் 4) வர்த்தகத் துவக்கத்திலேயே கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள புதிய போர் பதற்றங்கள் உலக முதலீட்டாளர்களின் மத்தியில் பெரும் கவலையையும், எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன.
இவற்றுடன் ஆர்பிஐ வட்டி விகிதக் கொள்கை முடிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களும் சந்தையின் இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளன.
ஒட்டுமொத்தமாகச் சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
