டிஜிட்டல் சேவை சட்டத்தின்படி, AliExpress எனும் சீன மின்னணு வணிக தளம் மீது 55 கோடி யூரோ அபராதம் விதிப்பதாக ஐரோப்பிய ஆணையம் ஜூலை 20ஆம் நாள் அறிவித்தது. இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜூலை 22ஆம் நாள் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், இதற்கு சீனா மனநிறைவின்மை மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று கூறினார்.
ஐரோப்பிய தரப்பு கண்காணிப்பைக் காரணமாகக் கொண்டு டிஜிட்டல் தடையை விதிப்பதோடு பாகுபாட்டு நடவடிக்கையுடன் ஜரோப்பாவில் இயல்பாக செயல்படும் சீன மின்னணு வணிக நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி அடக்கும் செயலை சீனா உறுதியாக எதிர்க்கிறது. ஐரோப்பிய தரப்பு சட்ட விதிகளின் தெளிவின்மையைப் பயன்படுத்தி தன்விருப்ப அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை நிறுத்தவும், சீன நிறுவனங்களை நீதியைப் பின்பற்றி நியாயமாக நடத்தவும் வேண்டும். சீன நிறுவனங்கள் சட்டப்படி தங்கள் உரிமை நலன்களைப் பேணிக்காக்க சீனா உறுதியுடன் ஆதரிப்பதோடு, வலிமையான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
