மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) இந்தியப் பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது.
கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே நிலவுவதால், சென்செக்ஸ் சுமார் 368 புள்ளிகளும், நிஃப்டி 115 புள்ளிகளும் சரிந்தன.
எண்ணெய் விலை உயர்வதால் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்ற கவலை சந்தையை நிலையற்றதாக மாற்றியுள்ளது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி! பங்குச்சந்தை எப்போது உயரும்?
