உள்கட்டமைப்புகளின் மேம்பாடு மற்றும் புதுப்பிப்புக்கு முக்கிய அம்சங்களையும் திசையையும் தெளிவுபடுத்தும் வகையில், 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலம் துவங்கியதும், நீர், புதிய ரக மின் தொகுப்பு, கம்பியூடிங் ஆற்றல், புதிய தலைமுறை தகவல் தொடர்பு, நகர்ப்புற நிலத்தடி குழாய், பொருட்கள் இணையம் ஆகிய 6 வலையமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை சீனா முன்னேற்றி வருகிறது.
உத்திநோக்கு திட்டங்கள் முதல் திட்டப்பணியின் முன்களப் பணிகளுக்கு வரை, இந்த 6 வலையமைப்புகளின் கட்டுமானப் பணிகள் வேறுபட்ட புள்ளிகளிலிருந்து தொடங்கிய கோடுகள் போல் நெருக்கமாக பின்னிப்பிணைந்து ஒரு பெரிய வலையாக உருவாகி வருகிறது. பெரிய வலையமைப்புகளின் இணைப்புடன் பல்வேறு தொழில்களும் புத்துயிர் பெற்று வருகின்றன. இந்த 6 வலையமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்திறன், எளிமையான கூட்டல் அல்லாமல், அனைத்து கூறுகளையும் உள்ளடக்கும் வேதியியல் வினை தான். அடர்த்தியான இந்த வலையமைப்புகள் சீனாவின் உயர்தர வளர்ச்சிக்கு நிரந்தரமான புதிய இயக்காற்றலை ஊட்டி வருகின்றன.
