சிங்கப்பூர் குடியரசின் தலைமை அமைச்சர் ஹுவாங் டுன் சையின் அழைப்பை ஏற்று, சீன அரசவை தலைமை அமைச்சர் லீச்சியாங் அக்டோபர் 25 மற்றும் 26ம் நாட்களில் சிங்கப்பூரில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதனையடுத்து, மலேசிய தலைமை அமைச்சர் அன்வாரின் அழைப்பை ஏற்று, லீச்சியாங் 27 மற்றும் 28ம் நாட்களில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 28வது சீன-ஆசியான் தலைவர்கள் கூட்டம், 28வது ஆசியான் ப்ளஸ் சீன-ஜப்பான்-தென் கொரிய கூட்டம், 20வது கிழக்காசிய உச்சிமாநாடு, பிராந்திய பன்முக பொருளாதாரக் கூட்டாளியுறவின் உடன்படிக்கைக்கான 5வது தலைவர்கள் கூட்டம் ஆகியவற்றில் பங்கெடுக்கவுள்ளார்.
