பூமிக்குத் திரும்பிய 57 நாட்களுக்குப் பிறகு, சீனாவின் ஷென்சோ-15 விண்வெளி வீரர்கள் ஜூலை 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பங்கெடுத்தனர்.
சீன விண்வெளி வீரர் ஆய்வு மற்றும் பயிற்சி மையம் அவர்களுக்கு அறிவியல் பூர்வமான உடல் மீட்சித் திட்டத்தை வகுத்துள்ளது. இதுவரை, 3 விண்வெளி வீரர்கள் 2வது மீட்சி கட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். அவர்களின் உடல் மற்றும் மன நிலை நன்றாக இருக்கிறது. ஆரோக்கியத்துக்கான மதிப்பீட்டுக்குப் பிறகு அவர்கள் இயல்பாகப் பயிற்சி மற்றும் பணியில் ஈடுப்படத் துவங்கவுள்ளனர்.
மேலும், சீன விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் இக்கூட்டத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. அவர்களின் விண்வெளி வாழ்க்கை, தனிச்சிறப்பு வாய்ந்த பார்வையுடன் மக்களுக்குக் காட்டப்பட்டுள்ளது.
