சீனாவின் தேசிய பொருளாதாரம் மே மாதம் சீராக இயங்கியது

Estimated read time 0 min read

16ஆம் நாள் முற்பகல் 10 மணிக்கு, சீன அரசவையின் செய்திப் பணியகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் கூறுகையில், இவ்வாண்டின் மே மாதம், சீனாவின் உற்பத்தி மற்றும் வினியோகம் சீராக உயர்ந்து, வேலை வாய்ப்பு மற்றும் பொருட்களின் விலை பொதுவாக நிதானமாக உள்ளது. வெளிநாட்டு வர்த்தகத்தின் உறுதித் தன்மை தெளிவாக உள்ளது. புதிய உந்து சக்தி வலிமையாக மாறியுள்ளது. தேசிய பொருளாதாரம் பொதுவான சீரான வளர்ச்சி என்ற முன்னேற்றப் போக்கைத் தொடர்ந்து நிலைநிறுத்துகிறது என்று தெரிவித்தார்.

மே மாதம் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு அளவு கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 4.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. சாதன தயாரிப்பு மற்றும் உயர் தொழில் நுட்பத் தயாரிப்புத் துறை விரைவாக வளர்ந்துள்ளது.

மே மாதம், சரக்குப் பொருட்களின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை 4 இலட்சத்து 45 ஆயிரத்து 160 கோடி யுவானாகும். இதில் இறக்குமதித் தொகை 2 இலட்சத்து 58 ஆயிரத்து 780 கோடி யுவானை எட்டி, 13.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஏற்றுமதித் தொகை 1 இலட்சத்து 86 ஆயிரத்து 380 கோடி யுவானை எட்டி, 21.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author