இவ்வாண்டின் முற்பாதியில் புதிதாக இயக்கப்பட்ட சரக்கு விமானச் சேவை பற்றிய தகவல்களை சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஜூலை 2ஆம் நாள் வெளியிட்டது. ஜுன் 30ஆம் நாள் வரை, இவ்வாண்டு சீனாவில் 117 புதிய சர்வதேச சரக்கு விமான மார்க்கங்கள் துவக்கப்பட்டன. வாரந்தோறும் அதிகரிக்கப்பட்ட இருவழி சரக்கு விமானங்களின் எண்ணிக்க 233ஐ தாண்டியது.
பிரதேசங்களைப் பார்க்கும் போது, ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஓஷானியா, ஆப்பிரிக்கா ஆகிய பிரதேசங்களுக்கு முறையே 54, 45, 12, 2, 2, 2 விமான மார்க்கங்கள் அமைக்கப்பட்டன. மேலும், இணைய வழி வணிகப் பொருட்கள், மின்னணு பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், புத்தம் புதிதான உணவுப் பொருட்கள் முதலியவை அனுப்பப்படுகின்றன.