மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? 8வது ஊதியக் குழுவின் அதிரடி அறிவிப்பு!

Estimated read time 0 min read

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழுவின் பணிகள் தற்போது மிக முக்கியமான ஆலோசனைக் கட்டத்தை எட்டியுள்ளன.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் இருந்து கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் பெறும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த நவம்பர் 2025 இல் அமைக்கப்பட்ட இந்த ஊதியக் குழுவிற்கு, தனது இறுதிப் பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க மொத்தம் பதினெட்டு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஏழு மாதங்களுக்கும் மேலாக இந்தக் குழு தனது கள ஆய்வுகளையும் மக்கள் கருத்துக்களையும் சேகரிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.

You May Also Like

More From Author