தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள், தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கலாம்…
முதல் நாளான இன்று மட்டும் நண்பகல் 12 மணி முதல் அதற்கான படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் தலைமை அலுவலகத்தில் வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக விருப்ப மனு தாக்கல் செய்யும் விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட தொகையை கட்ட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பில் அது போன்று எதுவும் இல்லை. இது குறித்து அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறும்போது, அந்த தொகை விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.
