ஐந்தாண்டு திட்டத்தை அறிவியல் முறையில் வகுத்து, தொடர்ச்சியாக செயல்படுத்துவது, சீன ஆட்சிமுறையின் முக்கிய அனுபவமாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 15வது ஐந்தாண்டு திட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என், கடந்த 3 ஆண்டுகளாக 46 நாடுகளைச் சேர்ந்த 47 ஆயிரம் பேரில் நடத்திய கருத்து கணிப்பின்படி, சீன ஆட்சிமுறையின் அனுபவங்கள் மற்றும் அறிவியல் பயன்களை பங்கேற்றவர்கள் வெகுவாக பாராட்டினர். சீனப் பொருளாதாரத்தின் மீதான அவர்களின் நம்பிக்கை உயர்ந்து வருகிறது.
2025ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், சீனாவின் அடிப்படை வசதிக்கான மேம்பாட்டை 79.8 விழுக்காட்டினர் பாராட்டினர். சீனாவில் கல்வி நிலை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்று 78.8 விழுக்காட்டினர் தெரிவித்தனர். மேலும், சீன மக்களின் வருமான நிலை உயர்ந்துள்ளது என்று 73 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
தவிர, சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சி மீதான அவர்களின் நம்பிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2025ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், சீனப் பொருளாதாரத் திறன் வலிமையானது என்று 89.5 விழுக்காட்டினர் தெரிவித்தனர். சீனப் பொருளாதாரத்தின் உயர்வேக வளர்ச்சியை 89.3 விழுக்காட்டினர் பாராட்டினர். மேலும், சீனப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்காற்றி வருகிறது என்று 86.4 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
