இந்தியப் பொருளாதாரம் 6.5% வளர்ச்சி அடையும்: கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் புதிய கணிப்பு  

Estimated read time 0 min read

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தின் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுமுக சூழல் திரும்பியுள்ளதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவடையும் என சர்வதேச முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.
இதன்படி, வரும் 2027 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடையும் என அந்நிறுவனம் தனது புதிய அறிக்கையில் கணித்துள்ளது.
முன்னதாக, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை அடுத்து, இந்தியாவின் வளர்ச்சி 6.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் என இந்த வங்கி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author