வெனிசூலாவில் நிவாரண உதவிப் பொருட்களை வழங்கிய சீனர்கள்

உள்ளூர் நேரப்படி ஜூன் 29ஆம் நாள் பிற்பகல் 2 மணி வரை, முழுமையாகாத புள்ளிவிபரங்களின்படி, வெனிசூலாவிலுள்ள சீனர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட குழுக்களின் ஏற்பாட்டுடன், வெனிசூலாவில் வாழும் சீனர்கள் சுமார் 1700 டன் எடையுடைய நிவாரண உதவிப் பொருட்களை நன்கொடையாக வழங்கினர். இதன் மூலம் அந்நாட்டில் பாதிக்கப்பட்ட பல பத்து ஆயிரம் குடும்பங்கள் உதவி பெற்றன.

வெனிசூலா அரசு 29ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 24ஆம் நாள் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1719ஆக உயர்ந்துள்ளது.

You May Also Like

More From Author