சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 105ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், “மக்களே முதன்மை” என்னும் இசை நிகழ்ச்சி ஜூன் 29ஆம் நாளிரவு பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள், சுமார் 3000 பார்வையாளர்களுடன் இந்த இசை நிகழ்ச்சியைக் கூட்டாகக் கண்டு ரசித்து, ஒளிவீசும் இந்த நினைவு நாளைக் கொண்டாடினர்.
பழம்பெரும் இசையும் பாடல்களும், சீனாவின் சோஷலிசப் புரட்சி மற்றும் கட்டுமானத்தில், குறிப்பாக சீர்திருத்தம் மற்றும் திறப்புப்பணியில் சீனாவில் தினமும் புதுமையான உயர்வேக வளர்ச்சியை எடுத்துக்காட்டி, சீன மக்கள் ஒருமனதாக இனிமையான வாழ்க்கையை நோக்கி முன்னேறி வருகின்ற விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன.
