சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகம் ஜூலை 15ஆம் நாள் சீனப் பொருளாதாரம் தொடர்பான புதிய தரவுகளை வெளியிட்டது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியேன் 16ஆம் நாள் கூறுகையில், இவ்வாண்டின் முற்பாதியில் சீனப் பொருளாதாரத்தின் பல்வகை ஒட்டுமொத்த குறியீடுகள் பொதுவாக சீராக வளர்ந்து வரும் போக்கினை நிலைநிறுத்தியுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 60 லட்சம் கோடி யுவானைத் தாண்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5 விழுக்காடு அதிகமாகும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது தொழில்கள் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 5.8 விழுக்காடும் 4.6 விழுக்காடும் அதிகரித்துள்ளது. சரக்கு வர்த்தகத்தின் மொத்த தொகை 21 லட்சத்து 20 ஆயிரம் கோடி யுவானை எட்டி, வரலாற்றில் இதே காலத்தில் இருந்ததை விட புதிய பதிவாகியுள்ளது.
நாட்டின் குடிமக்களின் நபர்வாரி செலவழிக்கக்கூடிய வருமானம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இவ்வாண்டின் முற்பாதியில் நிதானமற்ற உறுதியற்ற தன்மை அதிகரித்து வரும் உலகப் பொருளாதாரத்தில் சீனப் பொருளாதாரம் நிர்பந்தத்தையைத் தாங்கி, நிதானத்தை விரைவுபடுத்தி, இயக்காற்றல் வழங்கும் முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் தெரிவித்தார்.