ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வரலாற்று சிறப்புமிக்க இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஈரானில் உள்ள பல்வேறு நகரங்களில் தொடங்கவுள்ள நிலையில், அவரது மகனும் அரசியல் வாரிசுமாக கருதப்படும் முஜ்தபா கமேனி பாதுகாப்பு காரணங்களால் இதில் பொதுவெளியில் தோன்ற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கான ஈரானின் உச்ச தலைவரின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியான அயதுல்லா ஹக்கீம் எலாஹி, ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான தற்போதைய பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், முஜ்தபா கமேனியின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதால், ஈரான் பாதுகாப்புப் படையினரால் அவருக்கு போதுமான பாதுகாப்பை வழங்க முடியாது என்றும், இதனால் அவர் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் எலாஹி தெரிவித்துள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு: பாதுகாப்பு அச்சுறுத்தலால் மகன் முஜ்தபா கமேனி பங்கேற்க மாட்டார் எனத் தகவல்
