சீனாவின் ஹாங்காங்கைத் தலைமையகமாக கொண்ட சர்வதேச இணக்க அமைப்பின் திறப்பு விழா அக்டோபர் 20ஆம் நாள் நடைபெற்றது.
சீனத் துணை வெளியுறவு அமைச்சர் ஹுவா ச்சுன்யிங் அம்மையார் உரை நிகழ்த்திய போது கூறுகையில், சர்வதேச இணக்க அமைப்பின் கருத்து, உலக ஆட்சிமுறை முன்மொழிவுக்குப் பொருந்தியது. இது, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்துக்கு சட்டம் ஒழுங்கின் ஆக்கப்பூர்வமான ஆற்றலை ஊட்டும் என்றார். மேலதிக நாடுகள் சர்வதேச இணக்க அமைப்பில் ஆக்கமுடன் பங்கெடுத்து, இந்த அமைப்பின் மூலம், சர்வதேச சர்ச்சைகளை அமைதியாகத் தீர்ப்பதற்குப் புதிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
விகரகுவா, வெனிசூலா, காங்கோ குடியரசு, கிரிபட்டி, பாகிஸ்தான், கென்யா, டொமினிகா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச இணக்க அமைப்பின் முக்கியத்துவத்தை வெகுவாக பாராட்டினர். மேலும், இந்த மேடையின் மூலம், சர்வதேச சர்ச்சைகளின் தீர்வை முன்னேற்றி, மேலும் நியாயமான மற்றும் நேர்மையான சர்வதேச ஒழுங்கை உருவாக்குவதற்குப் பங்காற்றும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுவரை, சர்வதேச இணக்க அமைப்பை நிறுவுவதற்கான பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளின் எண்ணிக்கை 37ஐ எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
