அமைதி, பாதுகாப்பு, செழுமை, அழகு மற்றும் நட்புடன் கூடிய தாயகத்தை கட்டியமைக்க வேண்டும் என்ற ஷிச்சின்பிங்கின் முன்மொழிவுகள்
உலகளவில் நிறைய அண்டை நாடுகளைக் கொண்ட நாடாக சீனா விளங்குகின்றது. தற்போது அண்டை நாடுகளுடன் பழகும் புதிய முறைமையை உருவாக்குவதில் சீனா ஈடுபட்டு வருகின்றது. அதாவது, அமைதி, பாதுகாப்பு, செழுமை, அழகு மற்றும் நட்புடன் கூடிய தாயகத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்ற சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முன்மொழிவுகள் தான்.
சீனாவில் தூரத்து சொந்தங்களை விட வீட்டிற்கு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் மேலும் நம்பத்தகுந்தவர்கள் என்ற பழமொழி உண்டு. சொந்த வளர்ச்சி மற்றும் வளம், தனது அண்டை நாடுகளின் அமைதி மற்றும் வளத்துடன் நெருக்கமான தொடர்புடையது என்பதை சீனா நன்கு அறிந்திருக்கின்றது.
இந்த முன்மொழிவுகள் வெறும் வாய் மொழி வழக்காக அல்லாமல், உருப்படியான திட்டங்கள் மூலம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. எடுத்துக்காடாக, சீனாவும் வியட்நாமும் பெய்பு வளைகுடாவில் கடல் எல்லையை வெற்றிகரமாக வரையறுத்து, சர்ச்சை தீவிரமாக்காமல் தடுக்க ஒரு ஹாட்லைனை நிறுவின. சீனா, லாவோஸ், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நான்கு நாடுகள் மேகோங் ஆற்றில் கூட்டு ரோந்து தொடங்கியதைத் தொடர்ந்து, கடும் குற்றங்களின் எண்ணிக்கை 90விழுக்காட்டுக்கு மேல் குறைந்துள்ளது. சீனா, ஹசாகிஸ்தான் மற்றும் உஸ்பேகிஸ்தான் முதலிய நாடுகளுடன், ஒளிமின்னழுத்தம் உள்ளிட்ட எரியாற்றல் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை ஆழமாக்கி, பொருளாதார வளர்ச்சி மூலம் பாதுகாப்புத் துறையில் ஏற்படக் கூடும் அபாயங்களைக் குறைக்க முயற்சிக்கின்றது. சீனா மத்திய ஆசிய நாடுகளுடன், உவர்நிலத்துக்கான கட்டுபாடு, விளை நிலங்களிலான சிக்கன நீர் பாய்ச்சு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றது. இளம் அறிவியலாளர்கள் பரிமாற்றம் திட்டம் மூலம் ஆண்டுதோறும் ஆண்டை நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேலான அறிஞர்கள் சீனாவில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
தற்போது ஒருதலைபட்சம் மற்றும் வர்த்தக பாதுகாப்புவாதம் எழுந்திருக்கின்ற பின்னணியில், அமைதி, பாதுகாப்பு, செழுமை, அழகு மற்றும் நட்புடன் கூடிய தாயகத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்ற முன்மொழிவுகள் என்பது, உள்ளடக்கிய தன்மை வாய்ந்த ஒத்துழைப்பு மூலம் கூட்டு வளர்ச்சி அடையும் புதிய வழிமுறையை வழங்கியது.