கனமழை எச்சரிக்கை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மட்டுமின்றி அங்கன்வாடி மையத்திற்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடு செய்யும் வகையில் நவம்பர் 15ம் தேதி பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மழையின் தாக்கத்தைப் பொறுத்து மற்ற மாவட்டங்களின் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
