புதிய கட்சித் தலைவர் குறித்த இழுபறி நீடித்து வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி அதன் அடுத்த தேசியத் தலைவராக ஒரு பெண்ணை நியமிக்க வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
பாஜக தலைவராக ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் ஜனவரி 2023இல் முடிவடைந்தது.
ஆனால் மக்களவைத் தேர்தல்கள் போது, கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதற்காக அவரது பதவிக்காலம் ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த தலைவர் தேர்வு குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் விவாதங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் பரிசீலனையில் பல முக்கிய பெண் அரசியல்வாதிகள் பெயர்கள் குறிப்பாக, நிர்மலா சீதாராமன், டி. புரந்தேஸ்வரி மற்றும் வானதி சீனிவாசன் போன்ற தலைவர்கள் முன்னணியில் உள்ளனர் என அந்த செய்தி கூறியது.
முதன்முறையாக, பாஜக அதன் தேசிய தலைவர் பதவிக்கு ஒரு பெண்ணை நியமிக்கக்கூடும்
