சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் 8ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மத்திய கிழக்கின் சமீபத்திய நிலைமை குறித்த கேள்விக்கு பதிலளிகையில், போர் மீண்டும் வெடிப்பது எந்த ஒரு தரப்பின் நலனுக்கும் உகந்ததில்லை என்றும், இராணுவ வழிமுறை அடிப்படை பிரச்சினையத் தீர்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்தான புரிந்துணர்வு குறிப்பாணையைச் செயல்படுத்தவும், பேச்சுவார்த்தையின் மூலம் சர்ச்சையைத் தீர்க்கவும், ஆயுதப்பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
