தொழில்துறை முடுக்கி மசோதா பற்றிய சீனாவின் நிலைப்பாடு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்துறை முடுக்கி மசோதாவுடன் தொடர்புடைய கேள்விகளுக்குப் பதில் அளித்த போது, சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஏப்ரல் 27ஆம் நாள் கூறுகையில், சீன வணிக அமைச்சகம் 24ஆம் நாள், ஐரோப்பிய ஆணையத்துக்கு கருத்துக்களை வழங்கி, சீனாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு மற்றும் கடுமையான கவனத்தைத் தெரிவித்தது என்றார். இந்த மசோதாவில், மின்கலங்கள், மின்சார வாகனங்கள், ஒளிவோல்ட்டா மின்கலப் பொருட்கள், முக்கிய மூலவளங்கள் ஆகிய 4 புதிய நெடுநோக்கு தொழில்கள் பற்றி அதிகமான கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், பொது கொள்முதல் மற்றும் பொது ஆதரவுக் கொள்கையில், “பொருட்கள் உருவான இடம் தொடர்பாக” பிரத்தியேக விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது முதலீட்டு தடை மற்றும் விதி ரீதியிலான பாகுபாட்டை உருவாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author