ஜோங்குவான்சுன் மன்றத்தின் 2026ஆம் ஆண்டுக் கூட்டம் மார்ச் 25 முதல் 29ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது.
உலகளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான விருந்தினர்கள் இதில் பங்கெடுத்து, சீனாவின் தொழில்நுட்ப புத்தாக்கம், தொழிற்துறை புத்தாக்கம், உயர்தர அறிவியல் தொழில்நுட்ப திறப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய கருப்பொருட்களில் விவாதம் நடத்தினர்.
நடப்பு மன்றக் கூட்டத்தில், உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப நிர்வாகம், அடிப்படை ஆய்வு மற்றும் அறிவியல் தொழில்நுட்ப முன்னணி, புத்தாக்க சூழலியல் உள்ளிட்ட தலைப்புகளில் 60 இணை கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இதனிடையே, திறந்த அறிவியல் துறையில் சர்வதேச ஒத்துழைப்புக்கான செயல்திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு, சீனா தனது 10 முக்கியமான அறிவியல் ஆய்வு வசதிகளுக்கான அணுகலை உலகிற்கு வழங்குகிறது.
மேலும், நடப்பு ஜோங்குவான்சுன் சர்வதேச தொழில்நுட்ப வணிக கண்காட்சியில், 500க்கும் மேற்பட்ட உயர்தரத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, உலகிற்கு அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளை வழங்கியுள்ளது.
