ஊழலுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்காக, கடினமான, நீடித்த, மற்றும் முழு அளவிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய ஒழுங்குமுறை ஆணையத்தின் 4ஆவது முழு அமர்வுக் கூட்டம் ஜனவரி 6ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஷிச்சின்பிங் உரை நிகழ்த்துகையில்
கட்சியின் மீதான நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு ஆகிய பணிகள் வரலாற்றில் இல்லாத அளவில் தீவிரமாக்கப்பட்டு, பயன்மிக்க மாற்றங்கள் காணப்பட்டுள்ளன என்று கூறினார்.
ஊழல், நமது கட்சி எதிர்கொண்டு வரும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஊழல் எதிர்ப்பு என்பது மிகவும் முழுமையான சுய சீர்திருத்தம் ஆகும் என்றும், சீர்திருத்தம் என்ற மனவுறுதியுடன் இருந்து கண்டிப்பான முறையில் கட்சியை நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.