சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து 21-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆல் டைம் பெஸ்ட் பிளேயிங் லெவன் டெஸ்ட் அணியை நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கேன் வில்லியம்சன் தேர்வு செய்து அறிவித்துள்ளார். அப்படி அவர் வெளியிட்டுள்ள இந்த பிளேயிங் லெவனில் பல்வேறு ஜாம்பவான் வீரர்களுக்கு அவர் இடம் கொடுத்துள்ளார்.
அந்த வகையில் அவர் தேர்வு செய்துள்ள அணியில் : நான்கு ஆஸ்திரேலிய வீரர்களையும், மூன்று இந்திய வீரர்களையும், இரண்டு தென்னாப்பிரிக்க வீரர்களையும் தேர்வு செய்துள்ளார். அதுதவிர்த்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியில் இருந்து தலா ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இந்த அணியில் எந்த ஒரு நியூசிலாந்து வீரருக்கும் அவர் இடம் கொடுக்கவில்லை.
அந்த வகையில் அவர் தேர்வுசெய்த இந்த அணியில் துவக்க வீரர்களாக இந்திய அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் சேவாக் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங்கை 3-ஆம் நிலை பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார்.
நான்காவது இடத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை தேர்வு செய்துள்ள அவர் ஐந்தாவது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை தேர்வு செய்துள்ளார். ஆறாவது இடத்தில் ஏ.பி டிவில்லியர்ஸை தேர்வு செய்துள்ளார். ஏழாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்துள்ளார்.
மேலும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக டேல் ஸ்டெயின், சோயப் அக்தர், கிளன் மெக்ராத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். அதுதவிர்த்து ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனை தேர்வு செய்துள்ளார். அந்த வகையில் கேன் வில்லியம்சன் தேர்வுசெய்த சிறந்த டெஸ்ட் பிளேயிங் லெவன் இதோ :
1) விரேந்தர் சேவாக், 2) மேத்யூ ஹைடன், 3) ரிக்கி பாண்டிங் (கேப்டன்), 4) சச்சின் டெண்டுல்கர், 5) ஸ்டீவ் ஸ்மித், 6) ஏ.பி டிவில்லியர்ஸ், 7) எம்.எஸ் தோனி (வி.கீப்பர்), 8) டேல் ஸ்டெயின், 9) சோயிப் அக்தர், 10) கிளென் மெக்ராத், 11) முத்தையா முரளிதரன்.