சிக்கிம் தீஸ்டா அணை சுரங்கத்தில் பயங்கர மீத்தேன் வாயு வெடிப்பு: 7 தொழிலாளர்கள் பலி  

Estimated read time 1 min read

சிக்கிம் மாநிலம் நமச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய நீர்மின் கழகத்தின் தீஸ்டா ஸ்டேஜ்-VI நீர்மின் திட்டப் பணிகளின் போது, கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதைக்குள் ஏற்பட்ட மீத்தேன் வாயு வெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 18 தொழிலாளர்கள் சுரங்கத்தின் ஆழமான பகுதிக்குள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
நேற்று மாலை 3:40 மணியளவில் நடந்த இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டாம் நாளாக அங்கே தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநிலப் படைகள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

You May Also Like

More From Author