மத்திய அரசு ஊழியர்களுக்காக எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) நடைமுறைக்கு வருவது தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரியில் இந்தக் குழுவை அமைக்க ஒப்புதல் அளித்திருந்தாலும், இதுவரை தலைவர் அல்லது உறுப்பினர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்த தாமதம் காரணமாக, 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர வேண்டிய ஊதியக் குழு, உண்மையில் 2028ஆம் ஆண்டுக்குத் தள்ளப்படலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்தக் குழுவின் அறிவிப்புக்காகக் காத்திருக்கும் நிலையில், அதன் செயல்பாடுகள் தாமதமாவது குறித்து மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி சமீபத்தில் விளக்கம் அளித்தார்.
8வது ஊதியக் குழு நடைமுறை தாமதம் என தகவல்
