சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து என்ற புத்தகம் ஜகார்த்தாவில் அறிமுகம்

சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து என்ற புத்தகத்தின் 5ஆவது தொகுதியின் ஆங்கில மொழி பதிப்புக்கான அறிமுகக் கூட்டம் ஏப்ரல் 28ஆம் நாள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றது.

புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனையின் புதிய வளர்ச்சி சாதனைகளை முழுமையாக வெளிப்படுத்தும் இப்புத்தகம், நவீன சீனா பற்றி சர்வதேச சமூகம் புரிந்து கொள்வதற்கான சிறந்த படைப்பாகும் என்று இக்கூட்டத்தில் பங்கெடுத்த விருந்தினர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் புதிய பயணத்தை சீனா தொடங்கியுள்ளது. தங்க இந்தோனேசியா 2045 என்ற தொலைநோக்கிற்கு இந்தோனேசியா முன்னேறி வருகிறது. இருநாடுகள் ஒன்றிணைந்து உத்திநோக்கு திட்டங்களின் இணைப்பை முன்னேற்றி, வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை ஆழப்படுத்தினால், இருநாட்டு மக்களுக்கு உண்மையான நலன்களை கொண்டு வருவது மட்டுமல்ல, உலகளாவிய தெற்கு நாடுகளின் ஆற்றலை அதிகரிப்பதற்கும் உலகளாவிய நிர்வாக அமைப்புமுறையை மேம்படுத்துவதற்கும் வலுவான இயக்காற்றலை வழங்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

More From Author