சீனாவின் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களின் தொழில் நுட்பங்களை நகல் எடுத்ததாக அமெரிக்கா குறை கூறுவதாகச் சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் 9ஆம் கூறுகையில், உயர் நிலை அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சியில் சீனா விடாமுயற்சி மேற்கொள்வதன் மூலம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.
அதேவேளையில், விரிவான ஆலோசனைகள் நடத்தி கூட்டாகப் பங்கெடுத்து பயனடைதல் மற்றும் திறந்த ஒத்துழைப்பு ஆகிய கருத்துக்களின்படி சீனா செயல்படுத்தி வருகின்றது என்றார்.
இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டிய முக்கிய பொதுக் கருத்துக்களை அமெரிக்கா உணர்வுப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி, சீனாவை எதிர்த்து ஆதரமற்ற அவதூறு பரப்பக் கூடாது என்றும், செயற்கை நுண்ணறிவுத் துறையில் வலுவான நாடுகளான இரு நாடுகள் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் சீனா விரும்புவதாகவும் மாவ் நிங் தெரிவித்தார்.
