சீனாவின் 15வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் தொடக்கத்தில், சேவைகள் வர்த்தகத்தில் திறப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான சீனாவின் சர்வதேச சேவைகள் வர்த்தகக் கண்காட்சி பெய்ஜிங்கில் புதன்கிழமை தொடங்கியது.
பெய்ஜிங்கின் ஷௌகாங் பூங்காவில் செப்டம்பர் 13 வரை நடைபெறும் இக்கண்காட்சியில், 90 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளிலிருந்து பங்கேற்பாளர்களை ஈர்த்துள்ளது. மேலும், 1,800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளன.
“உலகளாவிய சேவைகள், பகிரப்பட்ட செழிப்பு” என்ற கருப்பொருளிலான நடப்பு கண்காட்சியின் போது, முதல் முறையாக உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் கூட்டு ஏற்பாட்டில் உலகளாவிய சேவைகள் வர்த்தக உச்சிமாநாடு நடைபெறுகிறது. அதோடு, பல கருத்தரங்குகள் மற்றும் வணிகப் பொருத்த நடவடிக்கைகளும் நடைபெற உள்ளன.
தகவல் மற்றும் தொடர்பு, நிதித் தொழில்நுட்பம், டிஜிட்டல் மற்றும் அறிவார்ந்த சுகாதாரப் பாதுகாப்பு போன்ற துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் இக்கண்காட்சியில் அறிமுகமாகின்றன. மேலும், பிரதானக் காட்சிப் பகுதியில், செயற்கை நுண்ணறிவு, பெரிய மொழி மாதிரிகள், அறிவார்ந்த ஏஜென்ட் உட்பட, சேவைகள் வர்த்தகத்தின் அனைத்து 12 பிரிவுகளையும் உள்ளடக்கிய 140-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிகழ்வுகளின் காட்சிகளும் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படுகின்றன. இது சீனாவின் சேவைகள் துறை எந்தத் திசையில் செல்கிறது என்பதைக் காட்டுகிறது.
