மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று மக்களவையில் மாற்றியமைக்கப்பட்ட வருமான வரி (எண்.2) மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்தினார்.
இதில் பாஜக எம்பி பைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழுவால் செய்யப்பட்ட 285 பரிந்துரைகளில் பெரும்பாலானவை இடம்பெற்றுள்ளன.
இந்த மசோதா, வருமான வரிச் சட்டம், 1961 ஐ மாற்றி, வருமான வரி தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைத்து திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கை பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவின் முந்தைய பதிப்பை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவின் நேரடி வரி கட்டமைப்பின் மிக முக்கியமான மாற்றமாக முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாற்றியமைக்கப்பட்ட வருமான வரி மசோதா 2025 மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
