சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவியும் காச நோய் மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்புக்கான உலக சுகாதார அமைப்பின் நல்லெண்ண தூதருமான பெங் லியுவான் அம்மையார், உலக சுகாதார அமைப்பின் 2025ஆம் ஆண்டு உலக காசநோய் தடுப்பு நாள் காணொளி கலந்துரையாடல் கூட்டத்தில் 24ஆம் நாள் எழுத்து மூல உரை நிகழ்த்தினார்.
பெங் லியுவான் அம்மையார் கூறுகையில், காசநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்குச் சீன அரசு மிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது. காசநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியாளர்கின் இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு, சீனாவில் காசநோய் நோயாளிகளின் குணமடையும் விகிதம் 90 விழுக்காட்டுக்கு மேல் உள்ளது என்றார்.
மேலும் காசநோய் அச்சுறுத்தலை அகற்றுவது கூட்டு விருப்பமாகும்.
அனைவருடன் இணைந்து மனிதக்குலச் சுகாதார சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவதற்குப் பங்காற்ற விரும்புகின்றார் என்றார்.