2029 உலகக் கட்டிடக்கலை தலைநகராக நியமிக்கப்பட்டுள்ள பெய்ஜிங்
உலகக் கட்டிடக்கலைத் தலைநகருக்கான கூட்டுக் கமிட்டியின் பரிந்துரையின் பேரில், யுனெஸ்கோ-சர்வதேச கட்டிடக்கலைஞர்கள் ஒன்றியம்(யுஐஏ) 2029ஆம் ஆண்டுக்கான உலகக் கட்டிடக்கலை தலைநகராக பெய்ஜிங் நியமிக்கப்பட்டுள்ளது என்று யுனெஸ்கோ 5ஆம் நாள் அறிவித்தது.
யுனெஸ்கோ மற்றும் யுஐஏ இணைந்து உருவாக்கிய உலகக் கட்டிடக்கலை தலைநகர் திட்டத்தின்படி, ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும், யுஐஏ உலக மாநாட்டை நடத்தும் நகரத்தை யுனெஸ்கோ-யுஐஏ உலகக் கட்டிடக்கலை தலைநகராக யுனெஸ்கோ நியமிக்கும்.
உலகின் மிக வளமான கட்டிடக்கலை பாரம்பரியங்களையும், தொடரவல்ல நகர்ப்புற வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வையையும் ஒருங்கே கொண்டிருக்கும் சிறப்புத் தகுதி காரணமாக, பெய்ஜிங் இந்த பெருமையைப் பெற்றுள்ளது என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
