இந்தியாவில் விரைவில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை முதற்கட்ட சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலங்களவையில் எழுதப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) மத்திய வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில், 1934-ஆம் ஆண்டைய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 25-ன் கீழ் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, தலா 100 கோடி பாலிமர் நோட்டுகள் முதற்கட்ட கள ஆய்விற்காக அச்சிடப்பட உள்ளன.
தற்போது இதற்கான கொள்முதல் பணிகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கான துல்லியமான காலக்கெடு உடனடியாக நிர்ணயிக்க முடியாது என RBI தெளிவுபடுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம்: ரூ.10, ரூ.20 பாலிமர் ரூபாய் நோட்டுகளுக்கு அரசு ஒப்புதல்
