சீன-இந்தோனேசியா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்தோனேசியா அரசுத் தலைவர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-இந்தோனேசியா உறவின் வளர்ச்சிக்குப் பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். அரசுத் தலைவர் பிரபோவோ சுபியாண்டோவுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு, இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை மேலும் ஆழமாக்கி, பலதரப்பு நெடுநோக்கு ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், வளரும் நாடுகள் ஒற்றுமையுடன் கூட்டு வளர்ச்சியடைவதற்கான முன்மாதிரியையும், தெற்கு தெற்கு ஒத்துழைப்புக்கான முன்னோடிகளையும் உருவாக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
பிரபோவோ சுபியாண்டோ கூறுகையில், இரு நாடுகளின் கூட்டாளி உறவுக்கு உயிராற்றல் கொண்டுள்ளது. இரு நாட்டு ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து ஆழமாக்கி, இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்புறவை வலுவடையச் செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.