சீனத் தேசிய திரைப்பட நிர்வாகத்தின் ஆதரவில் சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த சீனத் திரைப்படக் கண்காட்சியின் பரப்புரை நிகழ்வு 12ஆம் நாள் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்றது. இதில் இரு நாட்டுப் பண்பாடு மற்றும் செய்தி ஊடகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அந்நாட்டில் வாழும் சீனர்களும் இளம் மாணவர்களும் உள்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கிர்கிஸ்தானின் கலாச்சாரம், தகவல் மற்றும் இளைஞர்க் கொள்கை அமைச்சகத்தைச் சேர்ந்த திரைப்படப் பிரிவின் தலைவர் டலாந்த்பேக் டொலோபிகோவ் கூறுகையில், இக்கண்காட்சி மூலம் ஒரு நவீனமான சீனா பற்றி மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.
