சீனாவுக்கான ஹோண்டுராஸ் தூதரகம் ஜுன் 11ஆம் நாள் காலை, பெய்ஜிங்கில் திறக்கப்பட்டது. ஹோண்டுராஸ் வெளியுறவு அமைச்சர் ரேய்ன, சீன வெளியுறவு அமைச்சர் ஜின் காங் ஆகியோர் திரை நீக்கித் திறந்து வைத்தனர்.
சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஹோண்டுராஸ் அரசுத் தலைவர் காஸ்ட்ரோ சமூக ஊடகத்தில் கூறுகையில், அரசியல், அறிவியல், தொழில் நுட்பம், வணிகம் மற்றும் பண்பாடு ரீதியான புதிய கண்ணோட்டம் ஹோண்டுராஸுக்குத் தேவை.
ஹோண்டுராஸ், சீன வளர்ச்சியிலிருந்து அனுபவம் கற்றுக்கொள்ளும் அதே வேளையில், சீனா, புதிய லத்தின் அமெரிக்கக் கூட்டாளியுடன் பயன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கும் என்று தெரிவித்தார்.
இவ்வாண்டின் மார்ச் 25ஆம் நாள், சீனாவின் தைவானுடன் தூதாண்மையுறவைத் துண்டிப்பதாக ஹோண்டுராஸ் அறிவித்தது. தொடர்ந்து சீனாவுடன் தூதரக உறவை நிறுவியது.
கடந்த 2 மாதங்களில், சீனாவிலுள்ள தூதரகத்தின் கட்டுமானத்தை முன்னெடுத்த ஹோண்டுராஸுக்கு சீனா ஆதரவு அளித்துள்ளது.