தென் சீனக் கடல் ஆய்வுக்காக சீன ஊடகக் குழுமத்தின் நிபுணர்கள் குழு நிறுவுதல்

Estimated read time 1 min read

சீன ஊடகக் குழுமம், தென் சீனக் கடலுக்கான தேசிய ஆய்வகம், கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பெருங்கடல் மேலாண்மைக்கான ஹுவாயாங் மையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், சீன ஊடகக் குழுமத்தின் தென் சீனக் கடல் ஆய்வுக்கான நிபுணர்கள் கமிட்டியின் நிறுவுதல் மற்றும் தென் சீனக் கடல் பற்றிய தென் கிழக்காசியாவின்  கருத்து அறிக்கையின் வெளியீட்டு நிகழ்வு மார்ச் 29ஆம் நாள் ஹைநான் மாநிலத்தின் சான்யா நகரில் நடைபெற்றது.

சீன அறிவியல் கழகத்தின் தென் சீனக் கடல் ஆய்வகம், சீன வரலாற்று ஆய்வகம், தென் சீனக் கடலுக்கான தேசிய ஆய்வகம், கண்டத் திட்டுகளின் வரம்புகள் பற்றிய ஐ.நாவின் ஆணையம், இந்தோனேசிய-சீன கூட்டாளி உறவு ஆய்வகம் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 28 சீன-வெளிநாட்டு முன்னோடிகள் மற்றும் நிபுணர்கள், கமிட்டியில் சேர்ந்தனர். தென் சீனக் கடலுடன் தொடர்புடைய சர்வதேச பொது கருத்துகள் துறையில் மேலதிக நியாயமான கருத்துகளை வெளியிடுவதற்கு அவர்கள் ஞானம் மற்றும் திறனை வழங்கவுள்ளனர்.

தென் சீனக் கடல் பற்றிய தென் கிழக்காசியாவின் கருத்து அறிக்கை, சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்தின் உலக பொது மக்கள் கருத்துக் கணிப்பு மையத்தால் வழங்கப்பட்டது. இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 6 நாடுகளில் நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்துக் கணிப்பு மற்றும் பொதுக் கருத்துகளுக்கான ஆய்வின்படி, தென் சீனக் கடல் பற்றிய தென் கிழக்காசியா நாட்டு மக்களின் கருத்து மற்றும் நிலைப்பாடுகள் காணப்பட்டுள்ளன. தூதாண்மை வழிமுறைகள், பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வுகளின் மூலம் தென் சீனக் கடல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென் கிழக்காசியா நாட்டு மக்கள் ஆதரவளித்துள்ளனர் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author