கத்தாரின் தோஹாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாக வெளியான செய்திகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார்.
கடந்த வாரம் போர் நிறுத்த திட்டம் குறித்து விவாதிக்க தோஹாவில் கூடியிருந்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், நெதன்யாகுவால் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டாரா என்று கேட்டபோது, ”இல்லை, இல்லை, அவர்கள் அவ்வாறு செய்யவில்லை” என்று கூறினார்.
‘தோஹா தாக்குதலுக்கு முன்பு நெதன்யாகு எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை’: டிரம்ப்
