ஆஸ்திரேலியாவின் தலைமையமைச்சராக மீண்டும் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 13ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளில், தலைமையமைச்சர் அந்தோணி அல்பானீஸுடன் சந்திப்பு நடத்தினேன். நாம் இருவரும், சீன-ஆஸ்திரேலிய உறவின் வளர்ச்சி பற்றி ஆழமாக விவாதித்து, முக்கிய ஒத்தக் கருத்துக்களை எட்டி, இரு நாட்டுறவின் மேம்பாட்டுக்கு வழிகாட்டினோம் என்றார்.
சீனாவும் ஆஸ்திரேலியாவும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, இரு நாட்டுக் கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதற்கும், உலக அமைதி மற்றும் நிதானத்தை முன்னேற்றுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. தலைமையமைச்சர் அந்தோணி அல்பானீஸுடன் இணைந்து, இரு நாட்டு நெடுநோக்கு கூட்டாளி உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நன்மையளிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநாள், சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், அந்தோணி அல்பானீஸுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.