ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்குப் பின் பதவியேற்கும் எவரும் இஸ்ரேலின் இலக்காகவே இருப்பார்கள் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் 86 வயதான கமேனி கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கமேனியின் உடல் அவரது சொந்த ஊரான மஷாத் நகரில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இதற்காக ஈரானில் மூன்று நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஈரானின்அடுத்த தலைவருக்கும் குறி: இஸ்ரேலின் அதிரடி எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்
