மத்திய கிழக்கில் தொடரும் அமெரிக்க-ஈரான் போரினால் உலகளாவிய எரிபொருள் வர்த்தகப் பாதைகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையைத் தொடர்ந்து, கென்யா நாட்டிற்கு பெட்ரோலிய பொருட்களை அதிகளவில் விநியோகிக்கும் முன்னணி நாடாக சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை பின்தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
பெல்ஜியத்தின் கிப்ளர் தரவு நிறுவனத்தின் தகவல்களின்படி, கென்யாவுக்குத் தேவையான பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள் மற்றும் எரிபொருள் எண்ணெய் ஆகியவற்றின் பிரதான விநியோகஸ்தராக இந்தியா மாறியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய கச்சா எண்ணெயில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பொருட்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் பெட்ரோலிய ஏற்றுமதி ஆப்பிரிக்க நாடுகளை நோக்கி வெற்றிகரமாகத் திரும்பியுள்ளது.
கென்யாவுக்கு அதிக எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்து சாதனை
