இவ்வாண்டு ஜனவரி மாதத்தின் தேசிய நுகர்வோர் விலை குறியீட்டையும் உற்பத்தியாளர் விலைக் குறியீட்டையும் சீன தேசிய புள்ளிவிவரப் பணியகம் பிப்ரவரி 9ம் நாள் வெளியிட்டது.
ஜனவரியில் வசந்த விழா காரணமாக, நாடளவில் நுகர்வோர் விலை குறியீடு, கடந்த மாதத்தில் இருந்ததை விட 0.7 விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.5 விழுக்காடு உயர்ந்தது.
சேவை துறையின் விலை குறியீடு 0.9 விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது. இந்த அதிகரிப்பு அளவு, கடந்த மாதத்தில் இருந்ததை விட 0.8 விழுக்காட்டு புள்ளிகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு பொருள்களின் விலை குறியீடு 1.3 விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது.
வசந்த விழா விடுமுறையின் காரணமாக, தொழில் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உற்பத்தியாளர் விலைக் குறியீடு கடந்த மாதம் மற்றும் கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்தில் இருந்ததை விட முறையே 0.2 விழுக்காடு மற்றும் 2.3 விழுக்காடு குறைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.