இந்தநிலையில் பேச எழுந்த தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், “கேப்டன் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, தன்னுடைய பேச்சைத் துவக்கினார்.
சட்டசபையில் எவ்வளவோ மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடைபெற வேண்டிய நிலையில், ஏன் இவ்வளவு சண்டைகள்?
ஏன் இவ்வளவு தூரத்திற்கு சட்டமன்றத்தில் ஈகோவை முன்னுறுத்திய விவாதங்களும் வீண் சண்டைகளும் நடக்கின்றன.
சட்டசபை ஏன், சண்டை சபை ஆகிவிட்டது? எவ்வளவோ மக்களின் பிரச்சனைகள் இருக்க ஏன் இந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து வேறு வேறு பிரச்சினைகளை முன்வைத்து மாலை வரை கூச்சலுமாக சட்டசபை ஏன் மாறிக்கொண்டிருக்கிறது?
தங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களுடைய பிரச்சினையைப் பேச வேண்டியவர்கள் ஏன் மற்ற பிரச்சினைகளைப் பேசி சட்டசபை நேரத்தை வீணாக்குகிறார்கள்?
சட்டசபையை நடத்துவதற்கு எவ்வளவு பணம் செலவாகிறது என்பதை இவர்கள் உணர்ந்திருக்கிறார்களா?
ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, பொதுவான கருத்தாக என்னுடைய கருத்தை தேமுதிக சார்பில் இங்கு முன்வைக்கின்றேன்” என்று பலத்த ஒரு கூச்சலுக்கிடையே பிரேமலதா விஜயகாந்த் பேசி முடித்தபோது, அவர் பேசிய கருத்துக்களுக்கு நன்றி தெரிவித்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.
பேரவையில் மக்கள் குரலை எதிரொலித்த பிரேமலதா!
