2025ஆம் ஆண்டு உலக மனித உரு ரோபோ விளையாட்டுப் போட்டி 14ஆம் நாள் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் துவங்கியது.
உலகின் 16 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 280 அணிகள் இப்போட்டியில் போட்டியிடவுள்ளன. ஆகஸ்ட் 15முதல் 17ஆம் நாள் வரை 26 பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் 487 போட்டிகளில் இந்த அணிகள் பங்கேற்கும்.
நுண்மதி முடிவெடுப்பு, விளையாட்டு ஒருங்கிணைப்பு உள்ளிட்ட துறைகள் சார்ந்த முன்னேறிய சாதனைகள் இப்போட்டிகளின் மூலம் பன்முகமாகக் காட்டப்படலாம். உலகளாவிய நிலையில் மனித உரு ரோபோக்களின் முதலாவது பல்துறை போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.