நேபாளத்துக்கான சீனத் தூதரகம் ஆகஸ்டு 30ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, சுரங்கப் பாதை மீட்புதவிக்கான சீன நிபுணர்கள் நேபாளத்தைச் சென்று மீட்புதவி பணியில் ஈடுபடத் துவங்கினர்.
30ஆம் நாள், 13200 அவசர கால நிவாரணப் பொருட்களும், சுரங்கப் பாதை மீட்புதவிக்கான 4 நிபுணர்களும், சீன வான் படைகளைச் சேர்ந்த 2 பெரிய ரக சரக்கு விமானங்களுடன் நேபாளத்தைச் சென்றடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேபாளத்துக்கான சீனாவின் அவசர மீட்புதவியை சீனத் தூதரகம் ஆக்கமுடன் ஒருங்கிணைத்து வருவதுடன், நேபாளத்துடன் நீரியல் மற்றும் காலநிலை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, நேபாளத்தில் மீட்புதவி மற்றும் நிவாரண தடுப்புப் பணிக்கு உதவியளித்து வருகிறது.
நேபாளத் தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, உள்ளூர் நேரப்படி 29ஆம் நாள் 18:30 மணி வரை, அந்நாட்டில் ஏற்பட்ட மண் சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 675 பேர் உயிரிழந்தனர். மேலும் 2498 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
