சீன-நேபாள வெளியுறவு அமைச்சர்களின் தொடர்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, நேபாள வெளியுறவு அமைச்சர் ஹிஷால் கர்னலுடன் ஆகஸ்டு 29ஆம் நாள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது வாங்யீ கூறுகையில், நேபாளத்தின் எல்லை பகுதியில் பனிசரிவினால் ஏற்பட்ட கடும் மண் சரிவு பேரழிவில், இரு நாடுகளிலும் கடும் உயரிழப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளைக் கடந்த மிக கடுமையான பேரழிவு இதுவாகும். இதற்கான மீட்புதவி பணி சிக்கலாகவும் கடினமாகவும் உள்ளது என்றார். மேலும், இதற்கு சீனா முக்கியத்துவம் அளித்து, தற்காப்பு மீட்புதவி பணியை மேற்கொண்டதோடு, நேபாளத்தில் மீட்புதவி பணிக்கு உதவியளித்துள்ளது. பேரழிவை எதிர்கொள்ளும் இந்தக் கடினமான காலத்தில், இரு நாடுகள் ஒன்றிணைந்து, இந்தச் சவால்களைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சீன அரசு, மக்கள் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கான நேபாளத் தலைவர்களின் ஆறுதலை, ஹிஷால் கர்னல் தெரிவித்ததோடு, அவசர மனித நேய உதவியை வழங்கிய சீனாவுக்கு நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், நேபாளமும் சீனாவும் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. சீனா இன்னல்களைச் சமாளித்து, நேபாளத்துக்கு உடனடியாக ஆறுதல் மற்றும் உதவியை வழங்கி, இரு நாட்டுறவின் உயர்நிலையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது என்றார். மேலும், சீனாவுடன் தொடர்ந்து ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, சிக்கி கொண்டுள்ள மற்றும் காணாமல் போன சீன மக்களை முழுமூச்சுடன் மீட்டெடுக்கும் அதேவேளையில், சீனாவுடன் இணைந்து, காணாமல் போன வெளிநாட்டவர்களை மீட்டெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author