இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

Estimated read time 1 min read

இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பல ஆண்டுகள் ஆயுள் கொண்ட பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் ரிசர்வ் வங்கியின்(RBI) திட்டம் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான ‘பாரதிய ரிசர்வ் வங்கி நோட் மூத்ரன் பிரைவேட் லிமிடெட்’ (BRBNMPL) வெளியிட்ட சர்வதேச விருப்ப வெளிப்பாட்டிற்கு (EOI) இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
CCL Secure, Cosmo First போன்ற முன்னணி இந்திய பாலிமர் நிறுவனங்கள் மற்றும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற De La Rue நிறுவனத்துடன் இணைந்த இந்திய நிறுவனங்கள் ஆகியவை இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளன.
தேசியப் பாதுகாப்பு மற்றும் நாணயப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி பல புதிய கட்டுப்பாடுகளைக் விதித்துள்ளது.

You May Also Like

More From Author