புதுடெல்லியில் உள்ள சீன தூதரகம் சீன-இந்திய தூதாண்மை உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏப்ரல் முதல் நாள் ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்தியது.
இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தூதர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் ஜி20 போன்ற பலதரப்பு அமைப்புகளின் முக்கிய உறுப்பினர்களாக, சீனா மற்றும் இந்தியா வளரும் நாடுகளின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச நியாயத்தையும் நீதியையும் பராமரிப்பதற்கும் பன்முகத்தன்மையை நிலைநிறுத்துவதற்கும் பொதுவான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்கான சீன தூதர் சு ஃபெய்ஹோங் கூறினார்.
இந்தியா-சீனா உறவுகளை நெருக்கமாக உருவாக்குவதில் கடந்த ஐந்து மாதங்களில் பல சாதகமான முன்னேற்றங்கள் அடைந்துள்ளன என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.