தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மேற்கொண்ட முக்கிய முன்னெடுப்பாக, முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ஏசி பேருந்துகள் இன்று முதல் (ஆகஸ்ட் 11) முதல் முறையாக அறிமுகமாகின்றன.
இந்த புதிய பேருந்து சேவை திட்டம், காற்று மாசை குறைத்தல், எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்தல், மற்றும் பசுமை போக்குவரத்துக்கு மாறுதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பேருந்துகளை டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக கொண்டு வரும் முயற்சியை, தமிழக அரசு தற்போது வேகமாக முன்னெடுத்து வருகிறது.
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார பேருந்துகள் சேவை அறிமுகம்
